சீமான் கையை பற்றிய உதயநிதி.. கவனம் ஈர்த்த திருமண விழா சந்திப்பு!

Udhayanidhi – Seeman Meet : சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்து கை குலுக்கி உரையாடினர். இந்த சந்திப்பின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Published on: July 5, 2026 at 8:58 pm

சென்னை, ஜூலை 5, 2026: சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ‘துறைமுகம்’ காஜாவின் பேத்தியின் திருமண விழாவில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாட்டில் இருக்கும் இரு தலைவர்களும் திருமண நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்தனர்.

நிகழ்ச்சியின் போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் கை குலுக்கி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சில நிமிடங்கள் உதயநிதி சீமானின் கையைப் பிடித்தபடி மேடையின் மற்றொரு பகுதியில் சோபாவில் அருகருகே அமர்நது சிறிது நேரம் பேசினர். இந்த காட்சிகளின் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாகியுள்ளது.

சமூக நிகழ்வுகளில் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், உதயநிதி–சீமான் சந்திப்பு தனிப்பட்ட கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினருடனான தி.மு.க.வின் உறவு தொடரும் என்றும், எந்த சூழலிலும் அவர்களுக்கு அரணாக கட்சி இருக்கும் என்றும் தெரிவித்தார். சிலர் சோபா வந்தவுடன் திமுகவை விட்டுச் சென்றுள்ளனர். தவெக அரசு தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் பேரழிவில் இருந்து திமுகவும், மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டை நிச்சயம் மீட்பார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க செந்தில் பாலாஜிக்கு சென்னை போலீஸ் சம்மன்: ஜூலை 6-ல் ஆஜராக உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com