India Bangladesh Test match | சென்னையில் நடந்த முதல் கிரிக்கெட டெஸ்ட் போட்டியில், இந்தியாவிடம் வங்கதேசம் தோல்வியை தழுவியது. ரவிச்சந்திர அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
February 6, 2025
India Bangladesh Test match | சென்னையில் நடந்த முதல் கிரிக்கெட டெஸ்ட் போட்டியில், இந்தியாவிடம் வங்கதேசம் தோல்வியை தழுவியது. ரவிச்சந்திர அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Published on: September 22, 2024 at 3:37 pm
India Bangladesh Test match | சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவை 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற செய்தார் ரவிச்சந்திர அஸ்வின். இந்தப் போட்டியில், அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அதிகபட்சமாக 82 ரன்களை எடுத்தார், முதல் ஒரு மணி நேரம் ஷாகிப் அல் ஹசனுடன் கடுமையாகப் போராடினார்.
ஆனால் அஸ்வின் தாக்குதலுக்கு வந்தவுடன் அது அனைத்தும் முறியடிக்கப்பட்டது. அஸ்வின் 37வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் பணியை தொடரும் நிலையில், அவர் தனது பயிற்சியை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்க ஆல் அவுட் ஆனது. ரவிச்சந்திர அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது.
சுப்மன் கில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் குவித்திருந்தனர். தொடர்ந்து, 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் 234 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிச்சந்திர அஸ்வின் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க 4 விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா: 149 ரன்னில் சுருண்ட வங்கதேசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com