Ben Stokes Retires : கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
Ben Stokes Retires : கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

Published on: June 30, 2026 at 10:09 pm
லண்டன், ஜூன் 30, 2026: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், உலகின் சிறந்த ஆல்-ரௌண்டர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
முன்னதாக, ஜூன் 28, 2026 அன்று, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அதிகாரப்பூர்வமாக ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதை அறிவித்தது. அப்போது பென் ஸ்டோக்ஸ், தனது அணியினரிடம், “இது என் கடைசி டெஸ்ட்” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸ், 2019 உலகக்கோப்பை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 84 ரன்கள் அடித்து, இங்கிலாந்தை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றார்; அங்கு இங்கிலாந்து உலக சாம்பியனானது. இந்நிலையில், ஸ்டோக்ஸ் ஓய்வு, இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது தலைமையில் அணிக்கு புதிய ஆற்றல் கிடைத்தது.
மேலும், அவர் சமீபத்திய ஆஷஸ் தோல்வி மற்றும் உடல் சோர்வு காரணமாக அவர் ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பெனால்டி ஷூட்-அவுட்.. இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா.. பரபரப்பு ஹாக்கி ஆட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com