விஜய்,’ நல்லிணக்க சமூக நீதி’ அரசுக்கு ஆதரவு.. வைகோவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு!

IUML Welcomes MDMK : விஜய்யின் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு தெரிவித்துள்ளது.

Published on: June 27, 2026 at 8:08 pm

சென்னை ஜூன் 27, 2026; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான நல்லிணக்க சமூக நீதி நல்லரசு அனைத்து மக்களாலும் வரவேற்கப்படுகிறது என்றும், ஊழலற்ற மக்கள் நல ஆட்சி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் ஆகியவை இணைந்து விஜய் அரசுக்கு ஆதரவளித்துள்ளன. இதனால், தமிழகத்தில் நல்லிணக்க நல்லரசு உருவாகி, மக்கள் நலனுக்கான ஆட்சி வேரூன்றி வளர்ந்து வருகிறது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மறுமலர்ச்சி திமுக தலைவர் வைகோ தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், திமுக, பாஜக, பாமக ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக இணைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தற்போது வெற்றிக் கழகத்துடன் இணைந்திருப்பதை பொறுக்க முடியாமல், பொறுப்பற்ற வாதங்களை முன்வைத்து வருகின்றனர் எனவும் அவர் விமர்சித்தார்.

அறிக்கையின் இறுதியில், “நல்லிணக்கத்தை நிலைநாட்டுவோம், சமூக நீதியை நிலை நிறுத்துவோம், எல்லோருக்கும் வளர்ச்சி – முன்னேற்றத்தை முன்னெடுப்போம்” என பேராசிரியர் காதர் மொகிதீன் வலியுறுத்தினார். இதன் மூலம், தமிழக அரசியல் சூழ்நிலையில் வெற்றிக் கழகத்திற்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவு வலுப்பெற்றிருப்பது தெளிவாகிறது.

இதையும் படிங்க; திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது; பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com