சென்னை, ஜூன் 23, 2026: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட அமோனியா கேஸ் கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 67 தொழிலாளர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கேஸ் கசிவு குறித்து வி.ஏ.ஓ புகார் அளித்ததையடுத்து, பெரியபாளையம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையின் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது, குறிப்பாக அமோனியா கேஸ் டேங்க் சரியாக பராமரிக்கப்படாதது, விபத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எப்.ஐ.ஆரில் வெளியாகியுள்ள தகவலின்படி, தொழிற்சாலைக்குள்ளேயே ஊழியர்களை தங்க வைத்திருந்ததால், கேஸ் கசிவு நேரத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாதது, தொழிலாளர்களின் உயிருக்கு நேரடி அபாயத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், பெரியபாளையம் கேஸ் கசிவு சம்பவம் தொழிற்சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க பேச்சை விட செயல்தான் முக்கியம்.. எஸ்.ஏ சந்திர சேகர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்