Gold Rate Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.

Published on: June 23, 2026 at 11:16 am
சென்னை, ஜுன் 23 2026: கடந்த ஜூன் 19-ஆம் தேதி தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 மற்றும் கிராமுக்கு ரூ.380 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் மீண்டும் லேசான சரிவு பதிவாகியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளதால், ஒரு கிராம் தங்கம் ரூ.13,560-க்கு விற்பனையாகி வருகிறது.
தூய தங்கத்தைப் பொறுத்தவரை தங்கம் விலை இன்று ரூ. 14 793க்கும் ஒரு சவரன் ரூ. 118344க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க கச்சா பீப்பாய் 135 அமெரிக்க டாலராக உயருமா? நிபுணர்கள் எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com