இந்தியாவில் புல்லட் ரயில் 2027-இல் ஓடும்.. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

Ashwini Vaishnaw : புல்லட் ரயில் திட்டம் 2027-ல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Published on: June 22, 2026 at 12:51 pm

பாட்னா, ஜுன் 22 2026: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிகானீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புல்லட் ரயில் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “புல்லட் ரயில் எனும் கனவுத் திட்டம் 2027-ல் செயல்பாட்டுக்கு வரும்; இது கட்டம் கட்டமாகத் திறக்கப்படும். இந்தக் கனவு 2027-ல் நனவாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம், மும்பை – அகமதாபாத் இடையே முதன்முதலில் தொடங்கப்பட உள்ளது. உலக தரத்திலான வேக ரயில் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது. 320 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில், பயணிகளின் நேரத்தை பெருமளவில் மிச்சப்படுத்தும்.

அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், “இந்தத் திட்டம் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும். 2027ஆம் ஆண்டுக்குள் பயணிகள் புல்லட் ரயிலில் பயணிக்கத் தொடங்குவார்கள். இந்தியாவின் போக்குவரத்து துறையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும்” என்றார்.

புல்லட் ரயில் திட்டம், இந்தியா – ஜப்பான் கூட்டாண்மையில் முன்னெடுக்கப்படுகிறது. ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன், இந்தியாவில் வேக ரயில் சேவையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், இந்தியாவின் ரயில்வே துறை உலக தரத்துக்கு இணையான புதிய அடையாளத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க திடீரென இடிந்து விழுந்த கோவில் கட்டுமான கட்டிடம்.. 5 பேர் உயிரிழப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com