Factory Blast Tragedy : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர்.
Factory Blast Tragedy : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

Published on: June 21, 2026 at 10:46 am
தூத்துக்குடி, ஜூன் 21 2026: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள அயன் ராஜப்பட்டியில் இயங்கி வந்த ‘பாலாஜி ஃபயர் ஒர்க்ஸ்’ (Balaji Fire Works) பட்டாசுத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலை ஊழியரான நாதாத்துப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மொத்தம் 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிவிபத்தின் தாக்கத்தால் தொழிற்சாலையின் இரண்டு அறைகள் பகுதியளவில் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும், மூன்று அறைகள் முழுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் மேலும் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில் அதிகாரிகள் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகல்… என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com