Tuticorin : ‘என் கணவரின் உடலைப் பார்க்க விரும்புகிறேன். அவரது இறப்புக்கு நீதி வேண்டும். எனக்கு 8 மாதக் குழந்தையும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்” என ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி கப்பல் மாலுமியின் மனைவி உருக்கமாக தெரிவித்தார்.
Tuticorin : ‘என் கணவரின் உடலைப் பார்க்க விரும்புகிறேன். அவரது இறப்புக்கு நீதி வேண்டும். எனக்கு 8 மாதக் குழந்தையும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்” என ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி கப்பல் மாலுமியின் மனைவி உருக்கமாக தெரிவித்தார்.

Published on: June 15, 2026 at 11:57 am
தூத்துக்குடி, ஜூன் 15, 2026: ஓமனில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், நிஷாந்த் மருத்துவக் காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவரது உடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
Thoothukudi, Tamil Nadu | Indian seafarer Nishanth Uirthanathan's father says, "My son has been working on the ship for the past 10 months. The shipping company did not inform us about his death. Instead, they told us that my son was suffering from a health issue and then… https://t.co/BiBsuoey27 pic.twitter.com/1P9nrL9W7X
— ANI (@ANI) June 14, 2026
ஆனால், நிஷாந்தின் தந்தை, அவரது மகன் இறந்தது குறித்து கப்பல் நிறுவனம் தங்களுக்கு எந்தத் தகவலும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். “மருத்துவக் காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரது அலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டனர். மூன்று நாட்கள் கடந்தும், அவரது மரணம் குறித்து முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. laid up நிலையில் இருந்த கப்பலில் போதுமான மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை. உடலை பாதுகாப்பான முறையில் பராமரிக்கவும் நிறுவனம் தவறிவிட்டது,” என்று அவர் ANI-க்கு பேட்டி அளித்துள்ளார்.
நிஷாந்தின் மனைவி சரபின், “என் கணவரின் உடலைப் பார்க்க விரும்புகிறேன். அவரது இறப்புக்கு நீதி வேண்டும். எனக்கு 8 மாதக் குழந்தையும் 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்,” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம்.. மீசையை முறுக்கும் திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com