சர்ச்சையில் சிக்கிய பெண் மருத்துவர்.. மருத்துவ உலகினர் அதிர்ச்சி.. என்னப் பேசினார்?

Sejal Pawar remarks : பெண் மருத்துவர் ஒருவரின் உரையாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Published on: June 13, 2026 at 9:01 pm

புதுடெல்லி, ஜூன் 13, 2026: மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் (கே.இ.எம்) மருத்துவமனையில் பயிலும் எம்பிபிஎஸ் மாணவி சேஜல் பவார், பிரணித் மோரின் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆண் உடல்களின் தனிப்பட்ட உறுப்புகள் குறித்து பேசியதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை ஆல் இந்தியா மெடிக்கல் ஸ்டூடன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜிதேந்திர சிங் “மிகவும் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.

சேஜல் பவார் கருத்து சர்ச்சை

சேஜல் பவார், இறந்த உடல்களை குறித்துப் பேசும்போது, ஆண் உடல்களின் தனிப்பட்ட உறுப்புகளைப் பற்றி நகைச்சுவை செய்தார். இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கே.இ.எம் மருத்துவமனை, அவரை 15 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி, விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.

கண்டனம்

இந்நிலையில், ஆல் இந்தியா மெடிக்கல் ஸ்டூடன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜிதேந்திர சிங், “மருத்துவ மாணவர்கள் அனைவரும் இறந்தவர்களின் உடல் மீது சபதம் எடுத்து, உடலை கடவுளைப் போல் மதிக்க வேண்டும். சேஜல் பவார் கூறிய கருத்துகள் அந்த ஒப்பந்தத்துக்கு எதிரானவை. இறந்த உடலை அவமதிப்பது மிகக் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கே.இ.எம் மருத்துவமனை, சேஜல் பவாருக்கு ஆலோசனை வழங்கும் என்றும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 17 வயதில் நக்ஸலைட் ஆக விரும்பிய பவன்.. தடுத்து நிறுத்திய சிரஞ்சீவி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com