கனரா வங்கியில் அப்ரண்டீஸ் பணி; டிகிரி தகுதி: 3,000 பணியிடங்கள் அறிவிப்பு!

Bank Jobs | பொதுத்துறை வங்கியான கனராவில், அப்ரண்டீஸ் பணிக்கு 3000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி கல்வித்தகுதி தேவை.

Published on: September 20, 2024 at 3:42 pm

Canara Bank Jobs | கனரா வங்கி பயிற்சியாளர் பணிக்கு 3000 காலிபணியிடங்கள் அறிவித்துள்ளது. தகுதியும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 19 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுவரை உடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

ஜெனரல், ஓபிசி பிரிவினருக்கு ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியலும், தொடர்ந்து தாய்மொழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசிதேதி

செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க துவங்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4 ஆகும். மேலும் விவரங்களுக்கு கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான @canarabank.com.ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்; குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிப்பு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com