சென்னை, ஜூன் 4, 2026: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கே.அண்ணாமலை விலகுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சியின் வாக்கு சதவீதம் 11% இலிருந்து 3% ஆக சரிந்ததற்கு காரணம் அ.தி.மு.க. உடன் கூட்டணிதான் காரணம் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், புதிய பிராந்திய அடிப்படையிலான கட்சியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாமலை ராஜினாமா
ஜூன் 3, 2026 அன்று அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதனுடன், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கான காரணங்களை விளக்கும் அறிக்கையையும் இணைத்துள்ளார்.
பின்னர், அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது முடிவுக்கான காரணங்களை விளக்கினார்.
வாக்கு சதவீத சரிவு
2024 லோக்சபா தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் 11% இருந்தது. இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அது 3% ஆகக் குறைந்தது.
இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க. உடன் கூட்டணி என அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2021-இல் பாஜகக்கு இருந்த 4 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள், இப்போது 1 இடமாக குறைந்துள்ளது. இதையும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி திட்டம்
அண்ணாமலை, பல மாதங்களாகவே பாஜகவை விட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாக அவரது நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
அவர், பிராந்திய அடிப்படையிலான புதிய கட்சி ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனால், பாஜக இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் வெளியேறக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையகம், அண்ணாமலை தனது முடிவை மாற்றுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால், அண்ணாமலைக்கு நெருங்கியவர்கள், அவர் தனது முடிவில் மாற்றமில்லை என உறுதியாகக் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Kalyan Banerjee suspension : திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்….
GST: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது….
Galaxy Z Fold 8: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு இன்று அறிமுகமாகிறது….
Bedi on police role : ‘தண்டிப்பது ஒருபோதும் காவல்துறையின் நோக்கமல்ல’ என கிரண் பேடி தெரிவித்துள்ளார்….
NEET exam protests : நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த பன்சுல் பன்சால், “தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விரக்தியடைந்தேன்; போராட்டத்தில் கலந்துகொள்வதற்குப்…
EPFO Launches VISHWAS 2026 : நிலுவையில் உள்ள EPF தொடர்பான பிரச்சனைகளா? ‘இ.பி.எஃப்.ஓ விஸ்வாஸ் 2026 (EPFO VISHWAS 2026)’ திட்டம் ஒரு புதிய வாய்ப்பை…