Anushka Sharma: ஐபிஎல் 2026 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றியை நடிகை அனுஷ்கா சர்மா உணர்ச்சிபூர்வமாக கொண்டாடினார்.
Anushka Sharma: ஐபிஎல் 2026 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றியை நடிகை அனுஷ்கா சர்மா உணர்ச்சிபூர்வமாக கொண்டாடினார்.

Published on: June 1, 2026 at 11:04 pm
புதுடெல்லி, ஜுன் 1 2026: ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து, நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலிக்கு சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்பையுடன் இருந்த விராட் கோலியின் நெற்றியில் அன்பாக முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், அதற்கு இதயம், விரல்கள் குறுக்காக வைத்த எமோஜி மற்றும் கைகளை கூப்பிய எமோஜிகளை மட்டும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்ற பிறகு, கேமராவுக்கு முதுகு காட்டி நின்ற விராட் கோலியின் புகைப்படத்தை அனுஷ்கா பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் முன்னாள் ஆர்.சி.பி. வீரரும் பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றிருந்தார். “One felt nice, you did it twice” என்ற வாசகத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.
இறுதிப்போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆர்.சி.பி. வீரர்களுடன் இணைந்து வெற்றியை கொண்டாடியபோது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நடனமாடிய காட்சிகளும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
2013-ஆம் ஆண்டு ஒரு விளம்பர படப்பிடிப்பில் சந்தித்த இருவரும், பல ஆண்டுகள் காதலித்து 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2021-ஆம் ஆண்டு வாமிகா என்ற மகளும், 2024-ஆம் ஆண்டு அகாய் என்ற மகனும் பிறந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரபல பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர் காலமானார்..பிரதமர் மோடி இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com