ஆசிய U-17 சாம்பியன்ஷிப்: 3 தங்கம் உட்பட 10 பதக்கங்கள்… இந்திய மகளிர் மல்யுத்த அணி சாதனை

U-17 Asian Wrestling: ஆசிய 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் மொத்தம் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

Published on: June 1, 2026 at 5:32 pm

வுங் டாவ், ஜுன் 1, 2026: வியட்நாமின் வுங் தாவில் நடைபெற்ற ஆசிய 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி சிறப்பான சாதனையை பதிவு செய்தது.

தங்கப் பதக்கம்

46 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட புல்கித் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அதேபோல், 61 கிலோ பிரிவில் மான்சி லாதர் மற்றும் 69 கிலோ பிரிவில் ரச்சனா ஆகியோரும் தங்கப்பதக்கங்களை கைப்பற்றினர்.

வெள்ளிப் பதக்கம்

40 கிலோ பிரிவில் தனு, 43 கிலோ பிரிவில் பவிகா, 57 கிலோ பிரிவில் நேஹா மற்றும் 65 கிலோ பிரிவில் மொனி ஆகியோர் இறுதிச்சுற்றில் கடுமையாக போராடி வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.

வெண்கலப் பதக்கம்

49 கிலோ பிரிவில் ரச்சனா, 53 கிலோ பிரிவில் பூஜா மற்றும் 73 கிலோ பிரிவில் விஜயலட்சுமி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி ஆசிய அளவிலான U-17 சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிய U-20 சாம்பியன்ஷிப்: இந்தியாவின் முதல் தங்கத்தை கைப்பற்றிய மொகலி வெங்கட்ராம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com