வேலியே பயிரை மேயும் கொடூரம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Edappadi Palanisamy: தவெக ஆட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: May 28, 2026 at 5:21 pm

Updated on: May 28, 2026 at 5:24 pm

சென்னை, மே 28 2026: தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது. முதலமைச்சர் விஜய் அவர்களே எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.

வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?

சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை தொடங்குக.. மருத்துவர் அன்புமணி

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!
Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!
Tirunelveli Job Notification

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டம்!
Edappadi Palaniswami

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com