ஜூன் 19 வெளியாகிறதா ஜனநாயகன்? பரபரப்பு தகவல்கள்!

Jana Nayagan Out June 19 : 2026ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாகலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Published on: May 24, 2026 at 6:21 pm

சென்னை, மே 24, 2026: நடிகர் விஜயின் இறுதி படம் ஜனநாயகன் நீண்ட காலம் தாமதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 19 வெளியீட்டு தேதியாக டிக்கெட் தளங்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை; சி.பி.எஃப்.சி சான்றிதழ் கிடைத்தவுடன் உலகளாவிய வெளியீடு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் முதலில் திட்டமிடப்பட்டது ஜனவரி 9, 2026 ஆகும். இந்நிலையில், சி.பி.எஃப்.சி சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

புதிய அப்டேட்

இந்த நிலையில், புக் மை ஷோ போன்ற தளங்களில் ஜூன் 19, 2026 ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு என புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில், ஏப்ரல் 2026ல் ஜனநாயகன் படத்தின் ஹெச்.டி. பிரிண்ட், முழு படம் உட்பட, இணையத்தில் கசிந்தது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜனநாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார்; விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி டியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு ஜனநாயகன் படம் குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர், “மத்திய அரசின் தணிக்கை சான்றிதழ் கிடைத்தவுடன் உலகளாவிய வெளியீடு நடைபெறும்” என வெங்கட் கே. நாராயணா தெரிவித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இணையத்தில் பரவிய மார்பிங் படங்கள்.. நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com