திண்டுக்கலில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு.. சோகத்தில் கிராமம்!

Dindigul Electrocution Incident : திண்டுக்கலில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 19, 2026 at 9:33 pm

திண்டுக்கல், மே 19, 2026: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியில், மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மற்றும் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கருப்பையா மாடிக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவி சுதாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பின்னர், இவர்களை காப்பாற்ற முயன்ற மாணவர் சுப்பிரமணிய சிவா உதவ முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்கசிவு- என்ன காரணம்?

முதலில் மின்வாரிய வயர் அறுந்து விழுந்ததாக கருதப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணையில் வீட்டின் எலக்ட்ரிக் லைனில் ஏற்பட்ட மின் கசிவே காரணம் என தெரியவந்தது. மூவரின் உடல்களும் உடல்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

சோகத்தில் கிராமம்

ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி உயிரிழந்ததோடு, பக்கத்து வீட்டு மாணவரும் உயிரிழந்ததால் ஆத்தூர் பகுதியில் பெரும் சோக நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தாம்பரம் கானா பாடகர்கள் இரட்டைக் கொலை… இரு இளஞ்சிறார்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com