பணத்தின் அடிப்படையில் பாரபட்சம்.. கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுமா?

Special Darshan in Temples: தமிழக கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: May 19, 2026 at 7:14 pm

சென்னை, மே 19, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக கோயில்களில் நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விஸ்வ இந்து பரிஷத் வடதமிழ்நாடு பிரிவு தலைவர் பி. சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ளார்.

கட்டண தரிசன விவகாரம்

அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் 500 ரூபாய் வரை வசூலித்து சிறப்பு தரிசனம் வழங்கும் நடைமுறை சட்டபூர்வமானதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு தரிசனம்

மேலும் அந்த மனுவில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், புதுமண தம்பதிகள், வேண்டுதலுக்காக பால் குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனம் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தரிசனத்தில் பாரபட்சம்

பணத்தின் அடிப்படையில் தரிசனத்தில் பாரபட்சம் காட்டுவது இந்திய அரசியலமைப்புக்கு விரோதமானது என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நெல்லை காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. இளஞ்சிறார்கள் துணிகரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com