சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Ambattur Elderly Woman Murder: சென்னை அம்பத்தூர் மூதாட்டி படுகொலை விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 16, 2026 at 4:38 pm

சென்னை, மே 16, 2026: அம்பத்தூர் சூரப்பட்டில் 70 வயது மூதாட்டி பொன்னம்மாள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மே 14 இரவு, மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, பொன்னம்மாளை கை, கால்கள் கட்டி தாக்கி கொலை செய்தனர்.

இது தொடர்பான விசாரணையில், நில விற்பனைக்கு இடைத்தரகராக இருந்த பழனி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் (51) சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இவர்கள் நிலம் விற்ற ரூ.31 லட்சம் முன்பணம் வீட்டில் இருப்பதாக நினைத்து, கொள்ளையடிக்க முயன்றபோது, பணம் கிடைக்காததால் நகைகள் மட்டும் திருடிச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்றும், பல வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மூதாட்டி அண்மையில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விற்றுள்ளார்; இது குறித்து மோப்ப பிடித்த பழனி, துளசிதாஸ் அந்தப் பணத்தை கொள்ளையடிக்க நினைத்து மூதாட்டியை கொன்றுள்ளனர்.

மூதாட்டி அந்தப் பணத்தை அவரது மகள்களுக்கு ஏற்கனவே பிரித்து வழங்கிவிட்டார் என்றும் ரூ.1 லட்சம் மட்டும் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தற்*லைகள் அதிகரிப்பு.. நாட்டிலேயே இரண்டாம் இடம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com