சி.பி.எஸ்.இ-யில் மும்மொழி கட்டாயம்.. ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்!

CBSE : சி.பி.எஸ்.இ ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பில் மூன்று மொழிகள் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Published on: May 16, 2026 at 3:25 pm

புதுடெல்லி, மே 16, 2026: “2026 ஜூலை 1 முதல் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை (R1, R2, R3) படிக்க வேண்டும்” என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. மேலும், “இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகள் ஆக இருக்க வேண்டும். முக்கியமாக, பத்தாம் வகுப்பில் மூன்றாவது மொழி (R3)க்கு போர்டு தேர்வு நடத்தப்படாது; அது பள்ளிகளால் உள்ளகமாக மதிப்பீடு செய்யப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சி.பி.எஸ்.இ புதிய சுற்றறிக்கையின் படி, தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் என்.சி.எஃப்- எஸ்-இ 2023 வழிகாட்டுதலின் அடிப்படையில் மொழிக் கல்வி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டும்.

இதில், இரண்டு மொழிகள் இந்திய மொழிகள் ஆக இருக்க வேண்டும்; மூன்றாவது மொழியாக வெளிநாட்டு மொழி தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜூன் 21 நீட் மறுதேர்வு.. மாணவச் செல்வங்களே நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com