500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?

Activist Saves Hundreds of Girls : 500 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் காவலராகியுள்ளார் ஜோதி திவாரி.

Published on: May 15, 2026 at 6:49 pm

புதுடெல்லி, மே 15, 2026: மத்திய பிரதேசம் புந்தேல்கண்ட் பகுதியில், சமூக செயற்பாட்டாளர் ஜோதி திவாரி 500-க்கும் மேற்பட்ட சிறுவர் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளார். குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை காப்பாற்றும் நோக்கில் அவர் துணிவுடன் செயல்பட்டு வருகிறார்.

ஜோதி திவாரி சமூகப் பணி

சமூக செயற்பாட்டாளரான ஜோதி திவாரி, சிறுவர் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் புந்தேல்கண்ட் பகுதியில் தனது பணியைத் தொடங்கினார். சிறுவர் திருமணங்களை தடுக்கும் நோக்கில், அவர் அரசு அதிகாரிகள், போலீஸ் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டார்.

மேலும், பெற்றோரை நேரடியாக சந்தித்து, குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிலையில், இதுவரை 500-க்கும் மேற்பட்ட சிறுவர் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பல குழந்தைகள், திருமணத்திற்கு பதிலாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், அவரது முயற்சிகள், பெண்கள் கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன. சமூக அழுத்தம், பாரம்பரிய நம்பிக்கைகள், வறுமை ஆகியவை அவரது பணிக்கு பெரிய சவாலாக இருந்தன. பல இடங்களில், பெற்றோர் மற்றும் சமூக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி ஸ்லீப்பர் பஸ்ஸில் பெண் வன்கொடுமை.. டிரைவர், நடத்துனர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com