Fatima Sana : 15 பந்துகளில் அரை சதம் அடித்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சாதனை புரிந்துள்ளார்.
Fatima Sana : 15 பந்துகளில் அரை சதம் அடித்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சாதனை புரிந்துள்ளார்.

Published on: May 16, 2026 at 8:24 pm
இஸ்லாமாபாத், மே 16, 2026: பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா, ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்தியாவின் ரிச்சா கோஷ் உள்ளிட்டோரின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் மகளிர் டி-20 சர்வதேச போட்டிகளில் இதுவரை பதிவான மிக வேகமான அரைசதம் சாதனையைப் படைத்தார். முன்னதாக சோபி தேவ்னி (நியூசிலாந்து), போபே லிச்சிபீல்டு (ஆஸ்திரேலியா), ரிச்சா கோஷ் (இந்தியா) ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர். இந்த நிலையில், ஃபாத்திமா சனா, 15 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, இந்தச் சாதனையை முறியடித்தார்.
17வது ஓவரில்..
இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் 17வது ஓவரில் 152/4 என்ற நிலையில் இருந்தபோது, ஃபாத்திமா சனா களமிறங்கினார். இந்நிலையில், அவர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தொடர்ந்து, 19வது ஓவரில் 4, 4, 6, 6, 4 என 24 ரன்கள் குவித்தார்.இறுதியில், 62 ரன்கள் (19 பந்துகள், 10 பவுண்டரி, 2 சிக்ஸ்) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் வெற்றி
இந்தப் போட்டியில் ஃபாத்திமா சனாவின் ஆட்டத்தால் பாகிஸ்தான் 223/4 என்ற பெரிய ஸ்கோரைப் பதிவு செய்தது. ஜிம்பாப்வே அணி 90 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து, பாகிஸ்தான் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com