இந்திய ஹாக்கி பயிற்சியாளர் நியமனம்.. பி.ஆர் ஸ்ரீஜேஷ் அதிருப்தி!

Hockey India Appoints Soyez : இந்திய பயிற்சியாளர்களையும், சர்வதேச நிபுணர்களுடன் இணைத்து வளர்க்கும் திட்டம் உள்ளது என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா ஹாக்கி சங்கம், பிரபல பிரெஞ்சு பயிற்சியாளர் ஃப்ரெடெரிக் சோயஸ்-ஐ நியமித்துள்ளது.

Published on: May 14, 2026 at 7:41 pm

புதுடெல்லி, மே 14, 2026: இந்தியா ஹாக்கி சங்கம், பிரபல பிரெஞ்சு பயிற்சியாளர் ஃப்ரெடெரிக் சோயஸ்-ஐ இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. முன்னாள் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த முடிவு, 2036 ஒலிம்பிக் நோக்கில் நீண்டகால உயர் செயல்திறன் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.

பி.ஆர். ஸ்ரீஜேஷின் பதவி நீக்கம்

ஸ்ரீஜேஷ், 17 மாதங்கள் ஜூனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது காலத்தில், இந்தியா எஃப்.ஐ.ஹெச் ஜூனியர் உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த நிலையில், ஒப்பந்தம் முடிவடைந்ததால், ஹாக்கி இந்தியா புதிய பயிற்சியாளரை நியமித்தது. இதற்கிடையில், ஸ்ரீஜேஷ் சமூக வலைதளத்தில், “ஐந்து போட்டிகளில் ஐந்து பதக்கங்கள் வென்றும், எனது காலம் முடிவுக்கு வந்தது” என அதிருப்தி தெரிவித்தார்.

ஃப்ரெடெரிக் சோயஸ்

ஃப்ரெடெரிக் சோயஸ் 196 சர்வதேச போட்டிகள் விளையாடியவர்; 195 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இவர் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் தேசிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். தொடர்ந்து, ரியோ 2016, டோக்கியோ 2020, பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சியாளராக பங்கேற்றுள்ளார். 2019 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் – ஸ்பெயினை வெள்ளிப் பதக்கத்திற்கு வழிநடத்தியுள்ளார்.

இந்த நிலையில், 2036 ஒலிம்பிக் நோக்கில், இந்தியா நீண்டகால உயர் செயல்திறன் திட்டத்தை உருவாக்குகிறது; இதுவே, இந்திய ஹாக்கி சங்கத்தின் நோக்கமாக உள்ளது.

இதையும் படிங்க : பதவி பறிபோகும் அபாயம்.. ஜோதிடம் அல்ல.. இந்த 3 கேப்டன்களுக்கு சிக்கல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com