சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. இப்படி செக் பண்ணுங்க!

CBSE Results Released Online : சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 13, 2026) வெளியாகின.

Published on: May 13, 2026 at 3:15 pm

புதுடெல்லி, மே 13, 2026: சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு முடிவுகள் 2026 இன்று வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 85.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் 88.39% விட சற்று குறைவாக இருந்தாலும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை cbseresults.nic.in, cbse.gov.in, DigiLocker, UMANG போன்ற தளங்களில் பார்க்கலாம். இதில், 85.20% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாலின அடிப்படையிலான முடிவுகள்

பெண்கள்: 88.86% தேர்ச்சி
ஆண்கள்: 82.13% தேர்ச்சி
திருநங்கைகள்: 100% தேர்ச்சி
பெண்கள் ஆண்களை விட 6.73% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிராந்திய அடிப்படையிலான முடிவுகள்

திருவனந்தபுரம்: 95.62% (அதிகபட்சம்)
சென்னை: 93.84%
பெங்களூரு: 93.19%
டெல்லி (மேற்கு): 92.34%
பிரயாக்ராஜ்: 72.43% (குறைந்தபட்சம்)

முடிவுகளைப் பெறும் வழிகள்

cbseresults.nic.in
cbse.gov.in
DigiLocker
UMANG App
IVRS சேவை: இணைய வசதி இல்லாத பகுதிகளில் தொலைபேசி மூலம் மதிப்பெண்களை அறியலாம்.

இதில், மெரிட் பட்டியல் வெளியிடப்படவில்லை; ஆனால் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த 0.1% மாணவர்களுக்கு மெரிட் சான்றிதழ்கள் DigiLocker வழியாக வழங்கப்படும். மேலும், சப்பிளிமென்டரி தேர்வுகள் ஜூலை 15, 2026 அன்று நடைபெறும் என்றும் எல்.ஓ.சி ஆன்லைன் சமர்ப்பிப்பு ஜூன் 2 முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீட் வினாத்தாள் கசிவு.. வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com