எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்?.. டி.கே.எஸ் இளங்கோவன்!

TKS Elangovan : தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் இணையுமா என்பது உறுதியற்றதாகவே தெரிகிறது; உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் திமுகவை வழிநடத்தக் கூடும் என தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 9:13 pm

சென்னை, மே 5, 2026: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் தி.மு.க. உள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு.க ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், யார் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், இந்தியா டுடே ஆங்கிலச் சேனலுக்கு அளித்த பேட்டியில், “உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கட்சியை வழிநடத்தக்கூடும்“ என்றார்.

காங்கிரஸ், த.வெ.க கூட்டணி?

காங்கிரஸ் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக கூட்டணி அப்படியே நீடிக்கிறது; இடதுசாரிக் கட்சிகளும் விசிகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணையாது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலை மட்டும் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “நாங்கள் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியடைந்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் காரணம்.. சித்த ராமையா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com