பி.எஃப் கணக்கு தொலைந்து விட்டதா? பி.எஃப் பணத்தை எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

E-PRAAPTI portal : ஊழியர்களின் பழைய பி.எஃப் பணத்தை மீட்க உதவ, இ.பி.எஃப்.ஓ விரைவில் “E-PRAAPTI” என்ற புதிய டிஜிட்டல் போர்டலை அறிமுகப்படுத்துகிறது.

Published on: May 2, 2026 at 12:53 pm

சென்னை, மே 2, 2026: ஊழியர்களின் பழைய பி.எஃப் பணத்தை மீட்க உதவ, இ.பி.எஃப்.ஓ விரைவில் “E-PRAAPTI” என்ற புதிய டிஜிட்டல் போர்டலை அறிமுகப்படுத்துகிறது.
இது ஆதார் அடிப்படையிலான அங்கீகார முறையை பயன்படுத்தி, யூ.ஏ.என் UAN (Universal Account Number) இல்லாத பழைய கணக்குகளையும் கண்டறிந்து செயல்படுத்தும் வசதியை வழங்கும்.

E-PRAAPTI போர்டல் – முக்கிய அம்சங்கள்

இதன் நோக்கம் பழைய, செயலற்ற பி.எஃப் கணக்குகளை கண்டறிந்து, தற்போதைய யூ.ஏ.என்-க்கு இணைத்து மீண்டும் செயல்படுத்துதல் ஆகும். மேலும், இதன் அணுகுமுறை ஆதார் அடிப்படையிலான பாதுகாப்பான உள்நுழைவு ஆகும்.
இதன் முதல் கட்ட உறுப்பினர் அட்டை உள்ள நபர்களுக்கும், அடுத்த கட்டமாக உறுப்பினர் அட்டை நினைவில் இல்லாதவர்களுக்கும் சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பி.எஃப் கணக்குகள் தீர்வு

பொதுவாக, 3 ஆண்டுகள் பணம் செலுத்தப்படாத பி.எஃப் கணக்கு செயலற்றவை ஆகும். அந்த வகையில், இந்தியாவில் லட்சக்கணக்கான பழைய PF கணக்குகள் இன்னும் செயலற்ற நிலையில் உள்ளன; இதில் ஆயிரக்கோடி ரூபாய் ஊழியர்களுக்குச் சொந்தமானது.
இதற்கிடையில், 2025–26 நிதியாண்டில் இ.பி.எஃப்.ஓ 8.31 கோடி பி.எஃப் கோரிக்கைகளை தீர்வு செய்துள்ளது; 71% முன்னுரிமை PF கோரிக்கைகள் 3 நாட்களுக்குள் தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டன. மேலும், 98% கோரிக்கைகள் 20 நாட்களுக்குள் முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பஜாஜ் ஃபைனான்ஸ் வாரியம்.. ராஜீவ் பஜாஜ் ராஜினாமா? உருவாகிறது பஜாஜ் ஆட்டோ கிரெடிட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com