Kalimuthu Passes Away: தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்துவின் திடீர் மறைவு, அரசியல் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Kalimuthu Passes Away: தாராபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்துவின் திடீர் மறைவு, அரசியல் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Published on: April 30, 2026 at 11:58 am
திருப்பூர், ஏப்.30, 2026: தாராபுரத்தை அடுத்த வீராச்சி மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (56). இவர் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தனித்தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காளிமுத்துவுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் ஆன்மீக பணிகளிலும், அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, அவர் நேற்று உயிரிழந்தார்.
காளிமுத்துவை பொறுத்தமட்டில் மக்கள் தொடர்பு, ஆன்மீக ஆர்வம், அரசியல் பணிகளில் ஈடுபாடு ஆகியவற்றால் அவர் தனித்துவமானவர் என கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com