Mayor Mamdani: மன்னர் சார்லஸிடம் பேச அனுமதி கிடைத்தால், கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்பேன் என நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்துள்ளார்.
Mayor Mamdani: மன்னர் சார்லஸிடம் பேச அனுமதி கிடைத்தால், கோஹினூர் வைரத்தை திரும்ப கேட்பேன் என நியூயார்க் மேயர் மம்தானி தெரிவித்துள்ளார்.

Published on: April 30, 2026 at 11:36 am
நியூயார்க், ஏப்.30, 2026: பிரிட்டன் மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் நியூயார்க் நகரத்திற்கும் சென்றுள்ளார். இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “மன்னர் சார்லஸுடன் தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவின் கோஹினூர் வைரத்தை திருப்பி ஒப்படைக்குமாறு வலியுறுத்துவேன்” என்று மம்தானி தெரிவித்துள்ளார். அவர் மேலும், கோஹினூர் வைரம் இந்தியாவின் வரலாற்று, கலாச்சார அடையாளம் என்பதால், அது மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்றார்.
மன்னர் சார்லஸின் பயணம்
மன்னர் சார்லஸ் மற்றும் மகாராணி கமில்லா, அமெரிக்காவில் நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் உள்ளனர். முன்னதாக, அவர் நியூயார்க் நகரில், 9/11 நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் மேயர் மம்தானியும் கலந்து கொண்டார்.
கோஹினூர் வைரம் – பின்னணி
105.6 காரட் எடையுடைய கோஹினூர் வைரம், இந்தியாவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1849-ல் பஞ்சாப் பிரதேசம் பிரிட்டிஷ் ஆட்சிக்குள் சென்றபோது, இளம் மன்னர் துலீப் சிங்கிடம் இருந்து வைரம் பறிமுதல் செய்யப்பட்டு, 1850-ல் ராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, அது பிரிட்டிஷ் கிரவுன் ஜுவல்ஸ் தொகுப்பில், லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா பலமுறை அதை திருப்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மம்தானியின் கருத்து, பிரிட்டன்-இந்தியா இடையேயான காலனித்துவ கால நினைவுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் என்பதால், அவரது கருத்து உலகளவில் கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆப்கன் மீது பாக் தாக்குதல்.. 7 பேர் பலி.. பல்கலை கட்டடம் சேதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com