அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து.. ராமதாஸ் ஆதரவாளர் செக்.. சட்டச் சிக்கல் என்ன?

Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸின் எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: April 22, 2026 at 10:03 pm

சென்னை, ஏப்.22, 2026: அன்புமணி ராமதாஸின் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்தது, வேறு யாரும் இல்லை, ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் ஆவார். இவர், மாநிலங்களவை எம்.பி. ஆக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மனுவில், பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராக இல்லாத அன்புமணி, போலி ஆவணங்கள் அளித்து வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை- மகன் என்னப் பிரச்னை?

பா.ம.க.வில் தற்போது உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள இந்த பனிப்போர் பெரும் புயலாக தற்போது மாறியுள்ளது.
அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ் சசிகலா உடன் கூட்டணி வைத்து தனது ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்தியுள்ளார்.

மேலும், அன்புமணி ஆதரவாளர்கள் 18 பேரும் தேர்தலில் தோற்க வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார். இந்தப் பிரச்னை புயலாக வெடித்துள்ள நிலையில், தற்போது அவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்கு எதிராக நீதிமன்றத்தில் உதவியாளர் மூலமாக வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வருமான வரித்துறை சோதனை உண்மைதான். செல்வபெருந்தகை!

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com