Piyush Goyal: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என கூறிய பியூஸ் கோயல், சிறப்பான வெற்றியைப் பெறும் எனவும் கூறினார். மேலும் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடம் தோல்வியை தழுவியவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Piyush Goyal: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என கூறிய பியூஸ் கோயல், சிறப்பான வெற்றியைப் பெறும் எனவும் கூறினார். மேலும் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடம் தோல்வியை தழுவியவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Published on: April 22, 2026 at 1:10 pm
சென்னை ஏப்ரல் 22, 2026; 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பான பங்களிப்பை தமிழ்நாட்டில் அழிக்கும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வகித்தாளுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் குறித்து பேசுகையில், அதனை குடும்பம் என வர்ணித்த கோயல், “எங்கள் கூட்டணியில் எல்லாம் குடும்பம் போல அழகாக முடிவு செய்யப்பட்டுவிட்டது. மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய கேள்வியே இல்லை. முடிவுகள் வெளிவந்தவுடன், கடந்த காலத்தில் செய்ததுபோல, நாங்கள் குடும்பம் போல ஒன்றாக அமர்ந்து பேசுவோம்” என்றார்.
இதையடுத்து, நடிகர் விஜய் அரசியலில் நுழைந்ததை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “விஜயைப் பற்றி குறைவாகச் சொன்னால் நல்லது. அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தைரியம் கூட காட்டவில்லை.
தமிழ்நாட்டின் சிறப்பான வரலாற்றைப் பாருங்கள். நடிகர் சிவாஜி கணேசன் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. விஜயகாந்த் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது கூட 8% வாக்குகள் மட்டுமே பெற்றார். ரஜினிகாந்த், ரசிகர்கள் வாக்குகளுக்கு சமம் அல்ல என்பதை உணர்ந்தார். கமல்ஹாசன் எங்கள் தலைவர் வானதி சீனிவாசன் அவர்களிடம் தோல்வியடைந்தார்” என்றார்.
இதையும் படிங்க; ரூ.7.36 கோடி முதலீடு மிஸ்ஸிங்.. உதயநிதிக்கு எதிராக வருமான வரித்துறை.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com