ஜியோ ஐ.பி.ஓ எப்போது? முகேஷ் அம்பானியின் திட்டம் என்ன?

Bloomberg Reports Jio IPO Plan : ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ குறித்த தகவல்களை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் மே மாதம் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Published on: April 22, 2026 at 12:57 pm

மும்பை, ஏப்.22, 2026: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடமிருந்து, ஐ.பி.ஓ எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அந்நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கான வரைவு ஆவணங்களை 2026 மே மாதம் செபியிடம் சமர்ப்பிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்து ஐபிஓ குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. மேலும், ஐபிஓ காலக்கெடு குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தாமதம் ஏன்?

ப்ளூம்பெர்க் தகவலின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம், டிசம்பரில் முடிவடைந்த காலாண்டின் தரவுகளைப் பயன்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், ஈரானில் ஏற்பட்ட புவிசார் அரசியல் மோதலால் சந்தை வீழ்ச்சியடைந்ததால், இந்தத் திட்டம் தாமதமானது. இதற்கிடையில், இந்தப் பங்குப் பட்டியல், இதுவரை இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கலாம் என முதலீட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : ஹெச்.சி.எல் டெக் லாபம் உயர்வு.. ரூ.24 ஈவுத்தொகை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி
Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com