Best Motilal Oswal mutual funds: பெஸ்ட் மோதிலால் ஒஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் குறித்து இதில் பார்க்கலாம். இதில், சில ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.3 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளன.
Best Motilal Oswal mutual funds: பெஸ்ட் மோதிலால் ஒஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் குறித்து இதில் பார்க்கலாம். இதில், சில ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.3 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளன.

Published on: April 22, 2026 at 12:45 pm
சென்னை, ஏப்.22, 2026: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், நிலைத்தன்மையே மிகவும் முக்கியமானது. இதில்தான் சில மோதிலால் ஓஸ்வால் ஃபண்டுகள் தனித்து நின்று, வலுவான வருமானத்தை வழங்குகின்றன.
இதில், குறிப்பாக மூன்று ஃபண்டுகள் உள்ளன. அவை, மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், மோதிலால் ஓஸ்வால் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் இ.எல்.எஸ்.எஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகும். இந்தப் ஃபண்ட்களின் ஐந்து ஆண்டுகளின் வருமானத்தை பார்க்கலாம்.
இதையும் படிங்க : மின்சார வாகன உற்பத்தியில் புதிய முயற்சி.. ஹூண்டாய்- டி.வி.எஸ் மோட்டார் கையெழுத்து
மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் 24.76% வருமானத்துடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து அதன் லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட் 22.25% வருமானத்துடனும், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் 20.12% வருமானத்துடனும் உள்ளன.
அந்த வகையில் இந்தப் ஃபண்ட்களில் முறையே கடந்த 5 ஆண்டுகளில் ஒஸ்வால் மிட்கேப் ஃபண்ட் ரூ.1 லட்சம் முதலீடு ரூ.3 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளது. அதேநேரம், ஓஸ்வால் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.2.73 லட்சமும், இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் ரூ.2.50 லட்சமும் வருவாய் கொடுத்துள்ளது.
Disclaimer : மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்வதற்கு முன், படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக படிக்கவும். முதலீட்டுக்கு முன் செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரிடம் ஆலோசிக்கவும்.
இதையும் படிங்க :ஹெச்.சி.எல் டெக் லாபம் உயர்வு.. ரூ.24 ஈவுத்தொகை அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com