TVK Vijay : திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்.19, 2026) பரப்புரையில் ஈடுபடுகிறார்.
TVK Vijay : திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்.19, 2026) பரப்புரையில் ஈடுபடுகிறார்.

Published on: April 19, 2026 at 11:14 am
Updated on: April 19, 2026 at 11:16 am
சென்னை, ஏப்.19, 2026: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கில் பரப்புரை மேற்கொள்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தமட்டில் தி.மு.க. சார்பில் இனிகோ இருதயராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ ஆவார். இதனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
இந்த நிலையில் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், நடிகர் விஜய் பரப்புரை மேற்கொள்ள இடங்களில் ரசிகர்கள் கூடிவருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : கோவையில் தி.மு.க. ஒரு சீட் கூட ஜெயிக்க கூடாது.. வானதி சீனிவாசன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com