அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி!

Govt Approves 2% Allowance Hike : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Published on: April 18, 2026 at 9:10 pm

புதுடெல்லி, ஏப்.18, 2026: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, கடல்சார் காப்பீட்டுப் பாதுகாப்பை எளிதாக்கும் வகையில், ரூ.12,980 கோடி மதிப்பீட்டில் ‘பாரத் கடல்சார் காப்பீட்டுக் குழுமம்’ என்ற பெயரில் ஒரு உள்நாட்டுக் காப்பீட்டுக் குழுமத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நிலையற்ற கடல்வழிப் பாதைகளைக் கடக்கும்போதும், எந்தவொரு சர்வதேச இடத்திலிருந்தும் இந்தியத் துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து சர்வதேச இடங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கும் மலிவு விலையில் காப்பீடு தொடர்ந்து கிடைப்பதை இந்தக் குழுமம் உறுதி செய்கிறது” என்றார்.

அகவிலைப்படி உயர்வு

மேலும், விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையையும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்தது” எனவும் அவர் தெரிவித்தார்.
இது, தற்போதுள்ள அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்தில் 58 சதவீத விகிதத்தை விட இரண்டு சதவீதம் அதிகமாகும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பால் அரசு கருவூலத்திற்கு ஏற்படும் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு 6,791 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி.. 10 ஆண்டுகளை கடந்த யூ.பி.ஐ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com