ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்.. 16 பதக்கங்கள் வென்ற இந்தியா!

Asian Boxing Championships : 2026 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 16 பதக்கங்களை வென்றது.

Published on: April 11, 2026 at 2:11 pm

புதுடெல்லி, ஏப்.11, 2026: மங்கோலியா நாட்டின் உலான்பாத்தரில் நடைபெற்ற 2026 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா இன்று ஐந்து தங்கம், மூன்று வெள்ளி மற்றும் எட்டு வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்று தனது பயணத்தை நிறைவு செய்தது.

விஸ்வநாத் சுரேஷ் – தங்கப் பதக்கம்

ஆடவர் 50 கிலோ எடைப் பிரிவில், விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் டாய்ச்சி இவாயை 5-0 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்திய அவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் குத்துச்சண்டையில் நாட்டின் முதல் ஆசிய பட்டத்தை உறுதி செய்தார். ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், கஜகஸ்தானின் ஒராஸ்பெக் அஸில்குலோவிடம் 2-3 என்ற கணக்கில் கடுமையாகப் போராடித் தோற்ற சச்சின் சிவாச், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மற்ற போட்டிகளில் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தினார்கள். கஜகஸ்தானை விட ஒரு தங்கம் குறைவாக, ஐந்து தங்கங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்.. அரையிறுதிக்கு ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com