Toddy Row Ends in Police Firing : ஆலங்குளத்தில் எஸ்.ஐ இசக்கி ராஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், கள் இறக்கியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Toddy Row Ends in Police Firing : ஆலங்குளத்தில் எஸ்.ஐ இசக்கி ராஜா மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், கள் இறக்கியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: April 8, 2026 at 10:11 am
ஆலங்குளம், ஏப்.8, 2026: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கள் தொடர்பான தகராறில், போலீஸ் துணை ஆய்வாளர் (எஸ்.ஐ) இசக்கி ராஜா மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்நபரை, எஸ்.இ. இசக்கி ராஜா துப்பாக்கியால் இரு கால்களிலும் சுட்டார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7, 2026) நடைபெற்றது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஆலங்குளம், மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் கள் இறக்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை விசாரிக்க எஸ்.ஐ இசக்கி ராஜா இரு போலீசாருடன் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.ஐ இசக்கி ராஜா ஆபாசமாக பேசி எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மணிகண்டன் இரு கால்களிலும் எஸ்.ஐ இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் எஸ்.ஐ இசக்கி ராஜாவும் காயமுற்றதாக கூறப்படுகிறது. தற்போது இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com