Assembly Election 2026 : தான் பொறுப்பில் இருந்தபோதிலும் நினைத்ததை செய்ய முடியவில்லை என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Assembly Election 2026 : தான் பொறுப்பில் இருந்தபோதிலும் நினைத்ததை செய்ய முடியவில்லை என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Published on: April 7, 2026 at 4:05 pm
மதுரை, ஏப்ரல் 7 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மதுரை மத்தி தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பிரச்சாரத்தில் பேசிய அவர், தமிழக அரசில் பொறுப்பில் இருந்த காலத்தில் தாம் மேற்கொள்ள விரும்பிய பல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும், நிர்வாக மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக சில முயற்சிகள் தடைபட்டதாகவும், இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், எதிர்காலத்தில் அதிக செயல்திறனுடன் திட்டங்களை முன்னெடுக்க உறுதியாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு மேல் அரசியலில் இருப்பவர்களால் அதிகம் வெளிப்படையாக பேச முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க கல்பாக்கம் அணு உலை புதிய சாதனை.. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com