டெல்லி சட்டசபையில் பாதுகாப்பு மீறல்.. 3 பேர் கைது.. முகமூடி அணிந்த நபர் யார்?

Delhi Assembly Security Breach: டெல்லி சட்டசபையில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நபர் கார் ஓட்டி வி.ஐ.பி வாயிலை உடைத்து, மலர்க்கொத்து வைத்து விட்டு சென்றார்.

Published on: April 6, 2026 at 6:05 pm

புதுடெல்லி, ஏப்.6, 2026: டெல்லி சட்டசபையில் முகமூடி அணிந்த நபர் கார் ஓட்டி VIP வாயிலை உடைத்து, மலர்க்கொத்து வைத்து விட்டு சென்றார். அதாவது, ஒரு நபர் வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் 2-ஆம் வாயிலில் காரை ஓட்டி உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் காரிலிருந்து இறங்கி, மண்டபத்தின் முன்பாக மலர்க்கொத்தை வைத்து, மீண்டும் காரில் ஏறி சென்றார்.

இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில், முகமூடி அணிந்த ஒருவர் காரை ஓட்டி சட்டசபை வளாகத்தின் இரும்பு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் ஒரு மலர்க்கொத்து வைத்து விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் பெரிய பாதுகாப்பு மீறலாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், கார் ஓட்டிய நபர் சர்ப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் 2-ஆம் வாயிலை உடைத்து உள்ளே இவர் நுழைந்தார்.

பின்னர் காரிலிருந்து இறங்கி, சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் காரின் அருகிலுள்ள மண்டபத்தில் மலர்க்கொத்தை வைத்து, மீண்டும் காரில் ஏறி சென்றார். அவர் சிசிடிவி கேமரா காட்சிகளில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் காரை ஓட்டியவர் உள்பட 3 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மக்களின் கவனம் ஈர்த்த எம்.பி.. ராகவ் சதா-வுக்கு எதிராக ஆம் ஆத்மி.. பின்னணி என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com