உஷாரம்மா உஷார்.. உணவு டெலிவரிக்கு சென்ற இடத்தில் பெண் பாலியல் வன்புணர்வு!

Indian Uber Eats Driver: இங்கிலாந்து நாட்டில் உபர் ஈட்ஸ் டெலிவரி டிரைவராக வேலை பார்த்த இந்தியர், வாடிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Published on: April 1, 2026 at 12:31 pm

லண்டன், ஏப்.1, 2026: இங்கிலாந்து நாட்டில், உபர் ஈட்ஸ் டெலிவரி டிரைவராக வேலை பார்த்த 47 வயதான இந்தியர் ஜிதேந்திரகுமார் பிரஜாபதி, வாடிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில், அவர் முதலில் அந்த பெண்ணின் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்தார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பாலியல் பலாத்கார தாக்குதல் நடத்தியதாக காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகள் சிறை

இந்த நிலையில், லின்கன்ஷையர் போலீஸ் தகவலின்படி, பிரஜாபதி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் தொல்லை குற்றச்சாட்டிற்காக 18 மாதங்கள் ஒரே நேரத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாடுகடத்தல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

உணவு டெலிவரிக்கு சென்ற இடத்தில் பெண்ணிடம் போன் நம்பர் வாங்கி நட்புடன் பேசியுள்ளார். அன்றைய தினமே அவரின் வீட்டுக்கு மீண்டும் சென்ற பிரஜாபதி, அப்பெண்ணுடன் ஜனரஞ்சகமாக பேசியுள்ளார். இந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திவிட்டு, மன்னித்து விடுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், இந்த செய்தியை வாட்ஸ்அப்பில் இருந்து அழித்துள்ளார்; இதனை போலீசார் விசாரணையில் மீட்டெடுத்தனர்.

இதையும் படிங்க: ஈரான் ராணுவ கட்டமைப்புகளை தாக்கி அழித்த அமெரிக்க.. வீடியோ பகிர்ந்த ட்ரம்ப்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com