Udhayanidhi’s Campaign in Kanchipuram: தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கு அடிமை ஆகாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Udhayanidhi’s Campaign in Kanchipuram: தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கு அடிமை ஆகாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published on: March 31, 2026 at 2:07 pm
சென்னை, மார்ச் 31, 2026: அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியின் “அடிமை” என விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரின் “சிந்தனை வழிகாட்டிகள்” மோடி மற்றும் அமித் ஷா எனவும் கூறினார்.
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திங்கள்கிழமை (மார்ச் 30) தனது பரப்புரையை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். அப்போது, இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியை வெளியேற்ற நடத்தப்படுகிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “இந்த தேர்தலில் தமிழ்நாடு எப்போதும் டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு உட்படாது என்பதை நிரூபிக்க வேண்டும். மாநிலத்தை துரோகம் செய்கிற பாரதிய ஜனதா கட்சியை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
மேலும், எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் “அடிமை”. எதிர்க்கட்சித் தலைவரின் சிந்தனை வழிகாட்டிகள் மோடி மற்றும் அமித் ஷா ஆவார்கள். எனவே, இந்த சட்டமன்றத் தேர்தல் என்பது பழனிசாமியை வெளியேற்றுவதற்கானது. “மோடி, அமித் ஷாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமா? மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து, “தனது தந்தையும், தி.மு.க. கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறிய “இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லி” என்ற கருத்தையும் உதயநிதி ஸ்டாலின் நினைவுபடுத்தினார்.
இதையும் படிங்க: நாங்குநேரியில் வெள்ளைத்துரை போட்டி.. எந்தக் கட்சி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com