நாங்குநேரியில் வெள்ளைத்துரை போட்டி.. எந்தக் கட்சி தெரியுமா?

Vellathurai to Contest for Sasikala’s Party: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரபல காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை களம் காண்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: March 30, 2026 at 12:00 pm

Updated on: March 30, 2026 at 12:05 pm

சென்னை, மார்ச் 30, 2026: நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரபல காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற தொகுதிகள் வேட்பாளர்

அவர் சசிகலா கட்சி சார்பில் வேட்பாளராக களம் காண்கிறார். இது தொடர்பாக வெளியான பட்டியலில், தென்காசி சட்டமன்ற தொகுதியில் பூசத்துரையும், சிவகங்கையில் பிரபுவும், குளச்சலில் கிறைஸ்ட் மில்லரும், சிவகாசியில் நேஷனல் கணேசனும், திண்டுக்கல்லில் ராமுத்தேவரும், மயிலாடுத்துறையில் சுதாகரும், மன்னார்குடியில் ராசுப்பிள்ளையும், ஸ்ரீரங்கத்தில் விஜய்யும், திட்டக்குடி (தனி) தொகுதியில் பழனிவேலும், ஸ்ரீபெரும்புதூர் (தனி) புருஷோத்தமனும், திருச்சி கிழக்கில் நந்தக்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

கூட்டணி கட்சிகள் தொகுதி

அதேபோல் இசக்கி ராஜா தேவரின் பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர் மற்றும் ஆலங்குளம் தொகுதிகளும், அண்ணா சரவணின் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கட்சிக்கு நன்னிலம் உள்ளிட்ட தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் திருச்சி கிழக்கு.. நடிகர் விஜய் போட்டி.. த.வெ.க கணக்கு என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com