சூடுபிடிக்கும் திருச்சி கிழக்கு.. நடிகர் விஜய் போட்டி.. த.வெ.க கணக்கு என்ன?

Tiruchy East Polls Heat Up with Vijay Entry: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், சென்னை மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார்.

Published on: March 29, 2026 at 10:58 pm

சென்னை, மார்ச் 29, 2026: திருச்சி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவதால், கடுமையான தேர்தல் போட்டி உருவாகியுள்ளது.

இந்தத் தொகுதியில், வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம் 2,17,397 ஆகும். இதில், ஆண்கள் 1,04,883 ஆகவும், பெண்கள் 1,12,460 ஆகவும் காணப்படுகின்றனர். மேலும், திருச்சி மாநகராட்சியின் 23 வார்டுகள், காந்தி மார்க்கெட், ராக்க்போர்ட் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் இதில் அடங்குகின்றன. மேலும், இந்தத் தொகுதியை பொருத்தமட்டில், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நடுத்தர மற்றும் தொழிலாளர் வர்க்க வாக்காளர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இந்தத் தொகுதியை பொறுத்தவரை, தி.மு.க. வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏ இனிகோ எஸ். இருதயராஜ் கிறிஸ்தவ சமூகத்தில் வலுவான அடிப்படை தொடர்பு கொண்டவர் ஆவார்.

மேலும், அதிமுக வேட்பாளர் ஜி. ராஜசேகரன் — இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி செயலாளர் ஆவார். இவர், புதிய முகமாக களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், டாக்டர் கிருஷ்ணசாமி களத்தில் உள்ளார்.
இந்தத் தொகுதியில், 2016-இல் அதிமுக வெற்றி பெற்றது; அதேநேரம், 2021-இல் திமுக வெற்றிப் பெற்றது. இதற்கிடையில், விஜய் இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களை கவர முயற்சிக்கிறார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படும் தேர்தல் தொகுதியாக மாறியுள்ளது.

சென்னையில் விஜய்

விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியிலும் விஜய் களம் காண்கிறார். ஆக, அவர் சென்னை மற்றும் திருச்சியை குறி வைப்பது தி.மு.க.வின் வாக்கு வங்கியை பாதிக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை.. பெண்களுக்கு ரூ.2,000 உதவி, காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர் நரேந்திர மோடி!
Narendra Modi

மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com