Earthquake: டோங்கா தீவு அருகே 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாது அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
Earthquake: டோங்கா தீவு அருகே 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாது அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

Published on: March 24, 2026 at 12:48 pm
வெலிங்டன், மார்ச் 24 2026: தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா (Tonga) தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நேயாஃபு (Neiafu) நகரத்திலிருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில், கடலடியில் சுமார் 237 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. மேலும், நிலநடுக்கம் அதிக ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி அபாயம் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டோங்கா என்பது பாலினேசியாவில் உள்ள 171 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க; டேஜியான் தொழிற்சாலை தீ விபத்து.. 10 பேர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com