Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயண சாமிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
Puducherry Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நாராயண சாமிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

Published on: March 23, 2026 at 2:22 pm
Updated on: March 23, 2026 at 2:23 pm
புதுச்சேரி, மார்ச் 23, 2026: புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட இம்முறை அனுமதி அளிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை, நாராயண சாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி களேபரம்
புதுச்சேரியில் ஏற்கனவே காங்கிரஸின் மற்றொரு தலைவரான ரகுபதிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நாராயண சாமி மற்றும் ரகுபதியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.
புதுச்சேரி யூனியனில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 23, 2026) கடைசி நாளாகும். இந்நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மாநிலத்தில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டியலின விவசாயி படுகொலை.. குற்றவாளி ஏன் கைதாகவில்லை? எடப்பாடி பழனிசாமி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com