Indian Open Women’s Singles Title: மும்பையில் நடைபெற்ற இந்திய ஓபன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பட்டத்தை, கடந்த ஆண்டு சாம்பியனான அனஹத் சிங் மீண்டும் வென்றுள்ளார்.
Indian Open Women’s Singles Title: மும்பையில் நடைபெற்ற இந்திய ஓபன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பட்டத்தை, கடந்த ஆண்டு சாம்பியனான அனஹத் சிங் மீண்டும் வென்றுள்ளார்.

Published on: March 23, 2026 at 12:42 pm
மும்பை, மார்ச் 23, 2026: இந்திய ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் மும்பையில் நடைபெற்றன. இதில், முதலிடம் பெற்றும், கடந்த ஆண்டு சாம்பியனுமான அனஹத் சிங் கலந்துகொண்டார். இவர், இறுதிப் போட்டியில் எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனை ஹனா மோஅதாஸ் உடன் மோதினார். இந்நிலையில், அனஹத் சிங் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார்.
இறுதியில், எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனை ஹனா மோஅதாஸ்-ஐ 3-1 என வெற்றி பெற்று தனது பட்டத்தை தக்க வைத்தார். இந்த முழு போட்டியிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி, ஒரே ஒரு கேம் மட்டுமே இழந்தார். இதனால் போட்டி மிக விறுவிறுப்பாக காணப்பட்டது.
ஆண்கள் பிரிவு
தொடர்ந்து, முழுக்க இந்திய வீரர்கள் மோதிய இறுதியில், அபய் சிங் தனது சக வீரர் வீர் சோட்ரானி-யை நேரடியாக 3-0 என வெற்றி கொண்டார். இந்தப் போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ₹1.1 கோடிக்கு ஏலம்.. இளம் வயதில் சூர்யவன்ஷி சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com