“மது ஒழிப்புக்கு தேசிய கொள்கை வேண்டும்; இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக அதை மட்டும் செய்துவிட்டால், எத்தனை விஜய் வந்தாலும் தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும்” என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
“மது ஒழிப்புக்கு தேசிய கொள்கை வேண்டும்; இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக அதை மட்டும் செய்துவிட்டால், எத்தனை விஜய் வந்தாலும் தேர்தலில் திமுகதான் வெற்றிபெறும்” என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Published on: September 14, 2024 at 1:01 am
Thirumavalavan | அக்டோபர் 2ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து நடைபெற்ற சென்னை மண்டல சிறப்புச் செயற்குழுவில் வெள்ளிக்கிழமை (செப்.13) பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதுக்கடைகளை கட்டாயம் மூட முடியும் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நோக்கத்திற்காக செயல்படுவதாக பலர் கூறுகின்றனர். அவ்வாறு சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். இப்படி ஒரு போராட்டம் நடத்துவதால் தேர்தல் களத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படும்.
கூட்டணியில் நமக்கு சிக்கல் ஏற்படும். 2028 தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்ற சூழல் இருந்தாலும் கூட இந்த நோக்கத்தில் இருந்து நாம் ஒருபோதும், நழுவக் கூடாது என்பதை நாம் அழுத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் யாருக்கும் இங்கு பதிலளிக்கவில்லை.
பீகார், குஜராத்தில் மது விலக்கு
உதிரியாக இருந்து குரல் கொடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உள்ள விசிக கட்சி மக்களின் குரலாய் இதை ஓங்கி ஒலிக்கிறது. இதில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அக்டோபர் 2 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து நடைபெற்ற சென்னை மண்டல சிறப்புச் செயற்குழுவில் ஆற்றிய உரை… pic.twitter.com/sPv0BoExRD
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 13, 2024
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் மதுவிலக்கை ஆதரிக்கின்றனர். ஆனால், ஏன் தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்து இருக்கின்றன. பீகார், குஜராத், மிசோரம், நாகலாந்து பகுதிகளில் எப்படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பீகார், குஜராத், போன்ற பெரிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் போது தமிழகத்தில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது. அதனால்தான் இதை தேசிய மயமாக்க வேண்டும் என்கிறோம். இதை புரிந்து கொள்வதற்கும் ஒரு ஞானம் வேண்டும்.
விஜய் வந்தாலும்.. திமுக கூட்டணி
திமுக உடன் கூட்டணியில் இருந்துகொண்டே இதை ஏன் பேசுகிறீர்கள் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கூட்டணியில் இருந்துகொண்டே மக்கள் பிரச்சனைகளை எடுத்து பேசுகிற துணிச்சல் உள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும்தான்.
தமிழக அரசிற்கு விடுக்கிற வேண்டுகோள் படிப்படியாகவேனும் அரசு மதுபான கடைகளை அகற்றி நிலையான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம். அடுத்த தேர்தலுக்கு முன்பாக மதுபானக் கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெரும்.
திமுகவின் வெற்றியால் எங்களுக்கு என்ன லாபம் என்றால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதையே நாங்கள் வெற்றியாக பார்ப்பபோம். அடுத்தடுத்த நாட்களில் மக்கள் நிச்சயம் விசிகவையே ஆதரிப்பார்கள்” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com