சவரனுக்கு ரூ.5,360.. அதிரடியாக குறைந்த தங்கம்..இன்று வாங்கலாமா?

Gold Rate Today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

Published on: March 23, 2026 at 9:56 am

சென்னை, மார்ச் 23, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று சரிவடைந்துள்ளது. தங்கம் விலை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தொடந்து குறைந்து மீண்டும் 1 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தங்கம் விலை

தங்கம் விலை நேற்று கிராம் ரூ. 13620க்கு சவரன் ரூ. 1லட்சத்து 89ஆயிரத்து 960க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 670 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 5,360 குறைந்துள்ளது.

அந்தவகையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ. 12 ஆயிரத்து 950 க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 3 ஆயிரத்து 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 14 ஆயிரத்து 127க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 016க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ. 15 ஆயிரம் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்டநிலையில், இன்று ரூ. 15 குறைந்து ரூ. 235க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க 1 முதல் 5 ஆண்டு கால எஃப்.டி முதலீடு.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com