South Korea: தென் கொரியாவின் டேஜியான் நகரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
South Korea: தென் கொரியாவின் டேஜியான் நகரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: March 21, 2026 at 11:58 am
சியோல் மார்ச் 21 2026; தென் கொரியாவின் மத்திய நகரமான டேஜியான் நகரில் உள்ள வாகன உதிரிபாக தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பால் ஏற்பட்டதாக கருதப்படும் இந்த தீ விபத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் நால்வர் காணாமல் போயுள்ளனர்.
கொரிய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, 25 பேர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் அவசர உதவி பணியாளர்கள் ஈடுபட்டனர். அதிபர் லீ ஜே மியூங், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து மனிதவளமும் உபகரணங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க; ஈரானின் ராணுவ தளவாடங்களை தாக்கி அழித்து விட்டோம்.. இஸ்ரேல் பெஞ்சமின் நேதன்யாகு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com