Mathur Sathya: பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாதூர் சத்யா பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Mathur Sathya: பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாதூர் சத்யா பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Published on: March 20, 2026 at 5:54 pm
சென்னை, மார்ச் 20, 2026: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாதூர் சத்யா, பாலியல் புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட உள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த மதூர் சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்புடைய தளங்களில் சமூக நீதி, சாதி, மற்றும் பொது கொள்கை தொடர்பான கருத்துரைகளுக்காக அறியப்பட்டவர் ஆவார்.
இவர் மீது பெண்கள் சிலர் பாலியல் புகார்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, மார்ச் 14 அன்று நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில், மாதூர் சத்யாவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சிவா வெளியிட்ட அறிக்கையில், மதூர் சத்யா கட்சியிலிருந்தும், ஆல் இந்தியா யூத் ஃபெடரேஷன் மற்றும் இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்பு சங்கத்திலிருந்தும் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதூர் சத்யா வியாழக்கிழமை (மார்ச் 19, 2026) மாலை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இவர் மேலான விசாரணைக்காக சென்னை கொண்டு வரப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கல் காட்டுக்குள் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகள்.. அதிரடியாக சீல் வைத்த தமிழக அரசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com