வங்கதேச பிரதமரின் முதல் பயணம் இந்தியாவா? சீனாவா? பரபரப்பு தகவல்கள்!

Bangladesh FM India Visit: வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஏப்ரல் மாதம் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: March 20, 2026 at 12:47 pm

Updated on: March 20, 2026 at 1:11 pm

புதுடெல்லி, மார்ச் 20 2026: தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஏப்ரலில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருநாடுகளுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின் உறவுகளை இயல்புநிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (Indian Ocean Conference) பங்கேற்க மொரீஷியசுக்கு செல்லும் வழியில், ஏப்ரல் 8ஆம் தேதி புதுடெல்லியில் குறுகிய இடைநிறுத்தம் மேற்கொள்ள ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய உயர் ஆணையர் பிரணய் வர்மா, கலீலுர் ரஹ்மானை சந்தித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இந்தியா வருகைக்கான அழைப்பை வழங்கினார். இடைக்காலத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்களுக்கு பின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.

மேலும், பிரதமர் தாரிக் ரஹ்மானின் முதல் வெளிநாட்டு பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், புதிய அரசு தனது வெளியுறவு கொள்கையில் சமநிலையை கடைப்பிடிக்கும் வகையில், இந்தியா அல்லது சீனாவை விட, அண்டை நாடுகளான பூட்டான் அல்லது மாலத்தீவுகளில் ஒன்றை முதற்கட்ட விஜயமாகத் தேர்வு செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டான் அவரது முதல் வெளிநாட்டு பயண இடமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சீனாவின் புதிய இந்தியத் தூதர்.. யார் இந்த விக்ரம் துரைசாமி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com